மோசமான நிலையில் மகிந்தவின் உடல்நிலை! அனைவரையும் பிரார்த்திக்குமாறு அழைப்பு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாக பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(13.10.2026) வைத்தியசாலைக்குச் சென்று, மகிந்த ராஜபக்சவை பார்வையிட்டுத் திரும்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை முன்னரை விட மோசமான நிலையில் இருப்பதாக சீலரத்ன தேரர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அனைவரும் பிரார்த்தியுங்கள்
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் சீலரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் நிலவிய போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

இன்று அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 83 வயதாகின்றது. அவரது உடல்நிலையும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை நேரில் சென்று பார்த்தபோது, அவர் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. அவர் விரைவில் குணமடைய நாம் பிரார்த்திக்க வேண்டும்.

You must be logged in to post a comment.