இலங்கையை மீண்டும் படுகுழியில் தள்ள துடிக்கும் மஹிந்த குடும்பம்!
தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தைச் சிறு தவறுகளைக் காட்டி வீழ்த்த நினைப்பவர்கள், உண்மையில் மக்கள் மீதான அன்பினால் அதைச் செய்யவில்லை என கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் அரச பணத்தை முறையற்ற வகையில் கையாண்டு, தமக்கு நெருக்கமானவர்களுக்குப் பகிர்ந்து அளித்தவர்களே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் துடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதன் நோக்கம் தங்களது ஊழல்களைப் பாதுகாத்துக் கொள்வதும், மீண்டும் நாட்டைச் சுரண்டுவதுமே தவிர மக்கள் நலன் அல்ல என தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.