Local

அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த எண்ணிக்கை சுமார் 184,800 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஆஸ்திரேலியப் புள்ளிவிபரத் திணைக்களம் (ABS) தெரிவித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 172,800 ஆக இருந்த இந்தத் தொகை, ஓராண்டு காலப்பகுதிக்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

​கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியை நோக்கும் போது, 2013 ஆம் ஆண்டில் வெறும் 110,000 ஆக இருந்த இலங்கை வம்சாவளியினரின் எண்ணிக்கை, தற்போது 185,000 ஐ நெருங்கியுள்ளது.

இதன் மூலம், ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையில் வாழும் வெளிநாட்டுப் புலம்பெயர் சமூகங்களின் பட்டியலில் இலங்கை முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. மலேசிய வம்சாவளியினரை விடவும் இலங்கையர்களின் எண்ணிக்கை தற்போது முன்னிலையில் உள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading