Local

இலங்கையில் 35 வீதமான ஆண்கள் மது அருந்துகின்றனர்

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தொகையில் முப்பத்தைந்து வீதமானவர்கள் மதுபானம் பயன்படுத்துவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் தனிநபர் மதுபாவனை 4.3 லீற்றராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மது அருந்துபவர்களின் தனிநபர் நுகர்வு 18.9 லீற்றராக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தமது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை மதுபான பாவனைக்கு பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமாயின் மதுபானம் மீதான வரியை அதிகரிக்க வேண்டுமெனவும், அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வலியுறுத்தியுள்ளது.

மதுபானங்களின் விலையை குறைத்து விற்பனை நிலையங்களை அதிகரித்தல் மற்றும் சட்டவிரோத மதுபான அதிகரிப்பால் வரியை அறவிட முடியாது என கூறும் விஞ்ஞானப்பூர்வமற்ற வாதங்களுக்கு அரசாங்கம் ஏமாறக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, சட்டவிரோத மதுபான நுகர்வு இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், அதற்காக செயற்படும் நிறுவனங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading