இலங்கையை செல்வந்தர் நாடாக மாற்ற Gem Dollar திட்டம்…!!!r
இலங்கையிலுள்ள ரத்தின வளங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டை உலகின் வசதிமிக்க நாடுகளின் பட்டியலுக்குக் கொண்டு செல்லும் ஒரு புரட்சிகரமான யோசனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ரத்தின சுரங்க உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் இந்த முக்கிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
தற்போது மத்திய வங்கியிடம் தங்கம் மற்றும் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு இருப்பது போல, ‘ரத்தின டாலர் கையிருப்பு’ (Gem Dollar Reserves) முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இந்த யோசனையின் சாராம்சமாகும்.
இலங்கை ரத்தின வியாபாரிகளிடம் தற்போது டிரில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள ரத்தினக் கற்கள் கையிருப்பில் இருப்பதாகவும், ஆனால் அவற்றை உடனடியாக பணமாக்க முடியாத நிலை உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்குத் தீர்வாக ‘இலங்கை ரத்தின வங்கி’ (Gem Bank of Sri Lanka) ஒன்றை நிறுவி, அதன் மூலம் இந்த வளங்களைப் பொருளாதாரச் சொத்தாக மாற்றினால் இலங்கை பொருளாதார ரீதியாகப் பலமடங்கு முன்னேறும் என அந்தச் சங்கத்தின் தலைவர் கலாநிதி திலகசிறி விதாரண தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.