Local

இலங்கையை தொடர்ந்து பாதுகாப்பதற்கு ஒத்துழைக்குமாறு மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்!

கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை பெரும் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றிக்கு – சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பிற சேவைத் துறைகளின் அர்ப்பணிப்பு நிறைந்த பெரும் செயலாற்றலே காரணமாக அமைந்திருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக – சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில், எமது நாட்டு மக்கள் பொறுப்புடனும், மனவிருப்புடனும் செயற்பட்டிருந்தனர்.
இருந்த போதிலும் – பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதில், காலப்போக்கில், மக்கள் அலட்சியத்துடன் நடந்துகொள்ளத் தொடங்கியமை ஒரு கவலையான விடயமாகும்.

எப்படியிருப்பினும் – இன்றைய நிலவரப்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே, மீண்டும் COVID-19 நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது.

ஆனால் – இந்த அனைத்து நடவடிக்கைகளும் வெற்றி தருவது என்பது, நமது சுகாதார வழிகாட்டுதல்களை அலட்சியப்படுத்தாமல், அவற்றை மக்கள் தொடர்ந்தும் பொறுப்புடன் பின்பற்றுவதிலேயே தங்கி உள்ளது.
எம்மையும், ஏனையவர்களையும், ஒட்டுமொத்த நாட்டினையும் தொடர்ந்தும் பாதுகாப்பாக வைத்திருக்க ஒத்துழைக்குமாறு குடிமக்கள் அனைவரையும் நான் அழைத்து நிற்கின்றேன்!

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading