Local

இலங்கையை விட்டு வெளியேறும் மக்களால் பரபரப்பாகும் விமான நிலையம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

பாரிய அளவிலான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றமையே அதற்கு காரணமாகும்.வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டு கல்விக்காக மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அதிகரித்தமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளொன்றுக்கு நூறுகணக்கானவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணத்தை மேற்கொண்டுவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாடுகளில் திரும்ப அழைப்பதன் காரணம் விமான நிலையம் பரபரப்பாக இயங்குவதாகவும் மக்கள் பாரிய அளவில் குவிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கையில் உள்ள நுழைவு முனையம் அவ்வளவு பரபரப்பாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading