Local

இலங்கை அக்குறணையில் கோர விபத்து – 4 பேர் பலி!, எண்மர் காயம்

அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) முற்பகலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சீமெந்து கலவை லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியில் பயணித்த முச்சக்கர வண்டிகள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுமார் எட்டு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அத்துடன், இச்சம்பவத்தின் போது வீதியில் நடந்து சென்ற பாதசாரிகளும் விபத்தில் சிக்கியுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த நால்வரில் ஒரு பெண்ணும் மூன்று ஆண்களும் அடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் உடனடியாக அக்குறணைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading