Sports

இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக விக்ரம்?

எதிர்வரும் ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, இலங்கை அணியின் புதிய துடுப்பாட்டப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் ரத்தோர் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியத் தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் தற்போது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகச் செயற்பட்டு வருகிறார்.

எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி அவர் இலங்கை அணியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையைப் பலப்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading