Local

இலங்கை கடற்படையினரால் 14 சடலங்கள் மீட்பு!

இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீனாவின் மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால் இதுவரையில் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், கடற்படை சுழியோடி குழுவுடன் கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான எஸ்.எல்.என்.எஸ் விஜயபாகு SLNS Vijayabahu மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக 2 சடலங்களை மீட்டுள்ளனர்.

மேலும், கப்பலின் பல்வேறு இடங்களில் இருந்து மேலும் 12 பணியாளர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்ற வேளை இந்த மீன்பிடிக் கப்பலில் 38 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading