Local

இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த நடிகர் மோஹன்லால்

திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கை வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன், இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று (19) வருகை தந்துள்ளார்.

பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியின் அழைப்பிற்கு அமைய வருகை தந்த, பிரபல நடிகர் மோகன்லால் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகரின் கலரியில் இருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டனர்.

இந்த விஜயத்தின் போது, ​​அவர் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இதன்போது கலந்துகொண்டார்

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading