Local

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம்!

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம் வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது எனவும் மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading