Local

இலங்கை மக்களுக்கு மூன்று வருடங்களுக்குள் மேலும் 5 மில்லியன் கன மில்லி லீற்றர் தண்ணீர் தேவை!

நாட்டிற்கு எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள்
மேலும் 5 மில்லியன் கன மில்லி லீற்றர் நீர் தேவைப்படுகின்றது. அதனை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு, நீர்வழங்கல் அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு-செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் 3வருடங்களில் நாட்டில் குடிநீர் தேவையை நூறுவீதம் தீர்த்துவைப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இது சாத்தியமில்லாத விடயம். கடந்த 70 வருடங்களில் 45 வீத குடிநீர் தேவையே பூர்த்திசெய்ய முடியுமாகி இருக்கின்றது. என்றாலும் நாட்டிற்கு எதிர் வரும் மூன்று வருடங்களுக்குள் மேலும் 5மில்லியன் கன மில்லிலீற்றர் நீர் தேவைப்படுகின்றது. அதனை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் நாட்டில் நீர்த்தேவை அதிகரித்து வரும் நிலையில் ஆறுகள் மட்டும் குளங்களை நாம் உச்ச அளவில் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டம் அவசியம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading