இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை…!
இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் ஒரு வெளிநாட்டு ஊடக நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின் போது மத்திய வங்கி ஆளுநர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இதில் மேலும் தெரிவித்த அவர் “இந்த ஆண்டு இறுதி வரை எண்ணெய் விலை சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் நீடித்தால், நாம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும்.
இருப்பினும் ஏதேனும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டால், அது நிச்சயமாக ஒரு சவாலாக இருக்கும்.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் அடுத்த ஆண்டிலும் இலங்கையின் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 வீத இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மே மாதத்தில் மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை இந்த நிலைமை சாதகமாக மாறுவதற்குப் பங்களித்துள்ளன.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்தாலும், இறுக்கமான நிதி நிலைமைகளும் அதிக விலைகளும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது” என தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.