வரலாற்றில் முதல் முறையாக மின்சார விமானம்..!!
விமான வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியிருக்கு!
பெட்ரோல், டீசல் எதுவுமே இல்லாம, முழுக்க முழுக்க மின்சாரத்தில் மட்டுமே பறக்கும் மிகப்பெரிய விமானத்தை அமெரிக்காவை சேர்ந்த ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமா பறக்க விட்டு சாதனை படைச்சிருக்காங்க.
இந்த விமானத்துக்கு ‘ஹார்ட் X1’னு பேர் வச்சிருக்காங்க. நியூயார்க் விமான நிலையத்தில் நடந்த முதல் சோதனையிலேயே, சுமார் 1,100 அடி உயரம் வரைக்கும் பறந்து, 27 நிமிஷம் வானத்தில் இருந்து பத்திரமா தரை இறங்கியிருக்கு.
சத்தம் குறைவு, மாசு இல்லை, செலவும் கம்மி. இனி வரும் காலத்தில் விமான பயணமே இப்படி மாறப்போகுது!

You must be logged in to post a comment.