Local

இலங்கை முழுவதும் Trend ஆகும் ஷிரந்தி ராஜபக்சவின் புகைப்படங்கள்

முன்னாள் முதற்பெண்மனி ஷிரந்தி ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவரின் கண்சிகிச்சை ப்ளாஸ்டர் குறித்த புகைப்படங்கள்  பேசுபொருளாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால்  கடந்த 07ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அன்றைய தினம், கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.

அண்மையில், விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூர் சென்றிருந்தார்.

ஷிரந்திக்கு கிடைத்துள்ள புதிய அடையாளம்.. நாடு முழுவதும் Trend ஆகும் புகைப்படங்கள் | Shiranthi Rajapaksa Trending Images Social Media

அழைப்பாணை இறுதி நேரத்திலேயே கிடைக்கப் பெற்றதாகவும், சிகிச்சைக்காகவே அவர் சிங்கப்பூர் சென்றிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அவர் சிங்கப்பூரில் உள்ள வர்த்தக நிலையங்களில் உலாவிய புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

இந்நிலையில், அவர் நாடு திரும்பியவுடன் கைது செய்யப்படலாம் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த 5ஆம் திகதி நள்ளிரவில் அவர் இரகசியமாக நாட்டிற்கு திரும்பினார்.

தனது கண்சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் சென்றதாக குறிப்பிட்டிருந்த போதிலும், அவர் நாடு திரும்பும் போது, விமான நிலையத்தில் அவரின் முகத்தில் எவ்வித ப்ளாஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறிருக்கையில், 07ஆம் திகதி அதிகாரிகள் அவரின் இல்லத்திற்கு சென்று விசாரணையின் பின்னர் கைது செய்து அழைத்து வரும் போது அவர் கண்ணில் ஒட்டப்பட்டிருந்த சிகிச்சை ப்ளாஸ்டர், உண்மையில் விமர்சனத்திற்கு உள்ளானது என்பதை விட சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளானது என்றே கூறலாம்.

ஷிரந்திக்கு கிடைத்துள்ள புதிய அடையாளம்.. நாடு முழுவதும் Trend ஆகும் புகைப்படங்கள் | Shiranthi Rajapaksa Trending Images Social Media

பொதுவாக, இவ்வாறான கண் சிகிச்சைகளுக்கு X வடிவத்தில் ப்ளாஸ்டர்கள் ஒட்டப்படுவதில்லை. அதிலும், அவரின் கண்ணை திறக்கும் அளவுக்கு இல்லாமல் கூட அவசர அவசரமாக ஒட்டப்பட்டிருந்தமை நிதர்சனமாகவே வெளிப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் பலர் இது போன்ற பிளாஸ்டர்களை ஒட்டி கேலிக்கையான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

மருத்துவ ரீதியிலோ அல்லது சுகாதார தரப்புக்களில் இருந்தோ ஷிரந்தியின் கண்ணில் ஒட்டப்பட்டிருந்த ப்ளாஸ்டர் தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத போதிலும், பொதுவான ஒரு கண்ணோட்டத்தில் இது ஒரு நாடகமாகவே பார்க்கப்படுகின்றது.

மேலும், முன்னாள் முதற்பெண்மனி ஷிரந்தி ராஜபக்சவின் இந்த கண் பிளாஸ்டர் புகைப்படங்கள் போல தங்களது புகைப்படங்களை AI மூலமாகவும் கூட பலர் வடிவமைத்து பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading