இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பொலிஸ்மா அதிபர் நியமனம்!

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பெண் பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கான அனுமதியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன்படி
பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜயசிங்க ஆராச்சியே பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவை சேர்ந்த இவர், 1997 இல் உப பொலிஸ் அதிகாரியாக பொலிஸ் சேவையில் இணைந்தார்.
பின்னர் 2017ல் பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
