Local

இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை நிறுத்த தீர்மானம்!

இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒன்றை தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வருடாந்தம் குறைந்தது 750,000 கடவுச்சீட்டுகள் வழங்குவதற்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கடவுச்சீட்டு தயாரிக்கும் இயந்திரங்களுக்கு வருடத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை தொடங்கும் வரை தற்போதுள்ள கடவுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள N வகை உரிமங்களின் இருப்பு நவம்பர் மாதம் வரை மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும், 5 இலட்சம் N வகை அனுமதிப் பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு குடிவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading