Local

சவுதி அரேபியா தலைமையில்‌ உக்ரேன்‌-ரஷ்ய போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தை!

 

(காலித்‌ ரிஸ்வான்‌)

ஆகஸ்ட்‌ 5 மற்றும்‌ 6 ஆம்‌ திகதிகளில்‌ உக்ரேன்‌ ரஷ்ய போர்‌ தொடர்பான சமாதானப்‌
பேச்சுவார்த்தைகளை நடாத்த, மேற்கத்திய நாடுகளுக்கும்‌ இந்தியா மற்றும்‌ பிரேசில்‌ போன்ற நாடுகளுக்கும் மத்தியஸ்தம் வகிப்பதற்காக சவுதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளதாக வோல்ட் ஸ்ட்ரீட் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தோனேஷியா, எகிப்து, மெக்சிகோ, சிலி மற்றும்‌ சாம்பியா உள்ளிட்ட 30 நாடுகளைச்‌ சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவில் நடைப்பெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என இந்த சந்திப்பில் கலந்து கொள்ள உள்ள முக்கிய இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்

உக்ரைன்‌ மற்றும்‌ மேற்கத்திய நாடுகளின்‌ அதிகாரிகள்‌, இந்தப்‌ பேச்சுவார்த்தைகள்‌ உக்ரைனுக்கு நன்மை
பயக்க கூடியதாகவும்‌ மேலும்‌ அமைதியான ஒரு நிலைமையை உருதிப்படூத்த சர்வதேச அதரவை பெற்றுத் தரும் எனவும் எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில்‌ பங்கேற்க அழைப்பு விடுக்கும்‌ நாடுகளின்‌ எண்ணிக்கை இன்னும்‌
தீர்மானிக்கப்படவில்லை, இருப்பினும்‌ ஜுன்‌ மாதம்‌ கோபன்ஹேகனில்‌ நடந்த ஒப்பீட்டு பேச்சுவார்த்தையில்‌
பங்கேற்றவர்கள்‌ இதில்‌ பங்கேற்கபர்‌ என எதிர்பார்க்கப்படுகிறது என்று ௮றிக்கை குறிப்பிடுகிறது.

மேலும்‌ அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்‌ ஜெக்‌ சல்லிவன்‌ இதில்‌ கலந்து கொள்வார்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, போலந்து மற்றும்‌ ஐரோப்பிய ஒன்றியத்தால்‌
தத்தமது பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப்‌ பேச்சுவார்த்தைகள்‌ சவூதி அரேபியாவின்‌ ஜித்தா நகரில்‌ நடைபெற இருப்பதாக
தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading