World

இளவரசர் முஹம்மட் பின் சல்மான் பாகிஸ்தான் விஜயம்

சவூதி பாதுகாப்பு அமைச்சரும், துணை பிரதமருமான இளவரசர் முஹம்மட் பின் சல்மானின் பாகிஸ்தான் விஜயத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இளவரசர் வருகை தந்த விசேட விமானத்திற்கு பாகிஸ்தானின் ஜெற் ரக போர் விமானங்கள் 6 பாதுகாப்பு வழங்கின.

பல வருடகாலம் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்துள்ள பாகிஸ்தான் அதன் புதிய பிரதமர் இம்ரான்கானின் வழிகாட்டலில் சவூதி அரசுடன் பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading