இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியதா?
காசாவில் இடம்பெற்று வரும் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், இந்திய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் லட்சக்கணக்கான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன் பாகங்களை இஸ்ரேலுக்கு விநியோகித்துள்ளதாக அம்னஸ்டி இன்டர்நெஷனல் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
‘மேட் இன் இந்தியா’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2,500க்கும் அதிகமான ஏற்றுமதிகள் மூலமாகப் பெருமளவிலான இராணுவக் கருவிகள் இஸ்ரேலிய நிறுவனங்களுக்குச் சென்றடைந்துள்ளதாகவும், இத்தகைய ஏற்றுமதிகள் சர்வதேசச் சட்டங்களின் கீழ் இந்திய நிறுவனங்களுக்குச் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.