இஸ்ரேலுக்கு இராணுவ உதவி செய்த இநீதியாவினீ இரட்டை வேடம் அம்பலம்…!!!
காசா போரின் போது இஸ்ரேலின் இராணுவ விநியோகச் சங்கிலியில் இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதிகள் பெருமளவில் இடம்பெற்றிருப்பதாக அல் ஜசீரா ஊடகத்தின் புதிய புலனாய்வு அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் வரி ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இறக்குமதி மற்றும் சுங்க ஆவணங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இஸ்ரேல் இறக்குமதி செய்த ஒட்டுமொத்த போர்த் தளவாடங்களில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, 26 சதவீத பங்களிப்புடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றம் காசாவில் இனப்படுகொலை ஆபத்து இருப்பதாக எச்சரித்த பின்னரும், வெடிமருந்துகள் மற்றும் போர் வாகன உதிரிப்பாகங்கள் இந்த விநியோகச் சங்கிலி மூலம் இஸ்ரேலுக்குச் சென்றுள்ளது.

You must be logged in to post a comment.