இஸ்ரேலுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை..!!
ஈரானின் முக்கிய பொது உள்கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார மையங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் முகமது பாகர் சொல்காத்ர் (Mohammad Bagher Zolghadr) எச்சரித்துள்ளார். அமெரிக்காவுடனான தற்போதைய மோதல் போக்குகளுக்கு மத்தியில், இந்த அச்சுறுத்தல்களின் பின்னணியில் இருக்கும் இஸ்ரேல் மீதும் நிச்சயமாக தாக்குதல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் அண்மைக்கால தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் உள்கட்டமைப்புகள் சேதமாக்கப்பட்டால் இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்க முடியாது என ஈரான் இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

You must be logged in to post a comment.