World

இஸ்ரேலுக்கு ஐ.நா.கடும் கண்டனம்!

நேற்று ரஃபா நகர் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டது துரதிருஷ்டவசமான தவறு எனக்கூறிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, குட்டரெஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், இந்தக் கொடிய மோதலில் இருந்து தஞ்சம் தேடிவந்த ஏராளமான அப்பாவி பொதுமக்களை கொன்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளை நான் கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் இல்லை. இந்தக் கொடூர தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading