இஸ்ரேல் மீறினால் பொருளாதார தடை?
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் போர்நிறுத்தத் தீர்மானத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மதிக்க வேண்டும் என்று கொலம்பியா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஒருவேளை இந்த போர்நிறுத்த உடன்படிக்கையை இஸ்ரேல் கடைப்பிடிக்கத் தவறினால், அந்த நாட்டிற்கு எதிராகச் சர்வதேச சமூகம் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சட்டங்களை மதிக்காத நாடுகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.