இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்வியலாக ஏற்ற பாண்டிய அரசர்கள் மற்றும் அவரது வாரிசுகள்.
வரலாற்றில் பல முக்கிய பாண்டிய வம்சாவழியைச் சார்ந்த அரசர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்வியலாக ஏற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
அதில் ஒன்று தான் இக்கல்வெட்டு.
செயிதி அகமது நாயினார் ஆன வீர பாண்டிய முதலியார் மகள் என்று வரும் இக்கல்வெட்டு நாச்சியார் என்று முடியும் இது ஒரு பெண்மணியின் கல்வெட்டு.
இது போன்று பல கல்வெட்டுகள் உள்ளது.
இக்கல்வெட்டு போன்று சில இஸ்லாமிய பெரியவர்களின் மக்பரா ( அடக்கஸ்தலத்தின் ) கல்வெட்டில் சிலரின் முன்னோர்களின் கல்வெட்டில் பராக்கிரமபாண்டிய முதலியார் என்று வருவதை காண முடிகிறது.
இது போல இந்திய தொல்லியல் துறை பதிவு செய்த ஒரு தமிழ் கல்வெட்டில் பின்வருமாறு ( கிபி 1499)- Annual report of epigraphy 384 of 1950 யில் பின் வருமாறு
கொல்லம் 674 , 1 ஆவது பங்குனி மாதம்
18 தேதி சாது நாயினா செயிதி அகமது நாயினார் ஆன வீர பாண்டிய முதலியார் சமால் நாயினா செயிது அகமது நயினா சமால் நாயினார் சேகாலி நாயினார் ஆன செண்பகராம முதலியார் திங்கட்கிழமை பகல் மரித்தார்.
இறந்தவர் பெயர் சேகாலி ( சேகு அலி) நாயினார் ஆன செண்பகராம முதலியார்
இவரின் 4 தலைமுறைக்கு முன்னோரின் பெயர்தான் வீரபாண்டிய முதலியார் என்ற செயிது அகமது ( செய்யது அகமது ) நாயினார்.
கல்வெட்டு சொன்ன வருடங்களை வைத்து கணக்கிட்டு பார்க்கும்போது இந்த வீர பாண்டிய முதலியார் தான் கிபி 1300 களில் பாண்டிய பேரரசை ஆண்ட குலசேகர பாண்டிய மன்னனின் வாரிசான அரசன் வீரபாண்டியனின் அடுத்த தலைமுறை வாழ்ந்த காலத்திற்கு வருகிறது. சேகாலி நாயனார் என்ற செண்பகராம முதலியார் முதலியார் என்பவர் இவரின் biological தலைமுறை.
இவர்களுக்கு இஸ்லாமிய பெயர்கள் தனியாக இருந்தாலும் தனது அரச குடும்ப பாரம்பரிய பெயர்களை பட்டப் பெயர்களாக சூட்டிய பழக்கமும் அக்காலத்தில் வழக்கமாக இருந்தது. அதனால் தான் சிலரின் முன்னோர்களின் பெயர்கள் கல்வெட்டில் இஸ்லாமிய பெயருடன் சேர்த்து பராக்கிரமபாண்டிய முதலியார் என்றும் வருகிறது.
( உதா: செயிதி அகமது நாயினார் ஆன வீர பாண்டிய முதலியார்)
இதில் ஜமால் என்ற வார்த்தைக்கு சமால் என்று இருப்பது என்பது அக்காலத்தில்( 1499) ” ஜ” என்ற வார்த்தை தமிழ் மொழியில் புழக்கத்தில் இருந்துள்ளதா என்ற ஐயப்பாடும் எழுகிறது ) ஜப்பனை சப்பான் என்று கூப்பிடுவது போல!
தாத்தாவின் பெயர் பேர பிள்ளைக்கு வைக்கும் பழக்கம் அன்றைய பாண்டிய அரசர்களின் மரபில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இக்கல்வெட்டில் சமால் நாயினா என்ற பெயர் அடிக்கடி வருகிறது.
150 காலத்திற்கு முன்பு வரை பல இஸ்லாமிய பெரியவர்களின் தாத்தா பெயர்களை தனது பேர பிள்ளைக்கு சூட்டிய வழக்கம் இஸ்லாமிய தமிழ் சமூகத்திலும் இருந்துள்ளது.
( குறிப்பு : தேவர் என்ற புனைப்பெயர் போல முதலியார் என்ற பெயரும் அரச மற்றும் ராணுவ தளபதி பரம்பரையில் இருந்தவர்களுக்கும் அக்காலத்தில் சூட்டப்பட்டுள்ளது)
இன்று ஜாதிப் பெயர்களாக மாறிவிட்டன.

You must be logged in to post a comment.