World

ஈரானின் எண்ணெய் கப்பல்களை தாக்கத் தொடங்கிய அமெரிக்கா!

ஈரானின் பல எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அவற்றின் சரியான எண்ணிக்கை அறியப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

இதன்போது, ஈரானின் கார்க் தீவின் கடற்கரைப் பகுதியில் ஒரு கப்பல் குறிவைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

குறிவைக்கப்பட்ட கப்பல்களின் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஈரானின் எண்ணெய் கப்பல்களை தாக்கத் தொடங்கிய அமெரிக்கா! | Us Begins Attacking Iranian Oil Tankers

இதனைத் தொடர்ந்து, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களின் அருகில் உள்ள அனைத்து எண்ணெய் கப்பல்களுக்கும் (அவை நங்கூரமிடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும்) அங்கிருந்து வெளியேறுமாறு ஈரானின் புரட்சிகரப் படைப்பிரிவின் (IRGC) கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் கார்க் தீவு மிக முக்கியமான இடமாகும். போருக்கு முன்பு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 வீதம் இந்தத் தீவின் மூலமே கையாளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading