ஈரானின் நவீன போர் தந்திரம்! கலக்கத்தில் அமெரிக்கா!!
ஹார்முஸ் நீரிணையில் ஈரான் அதிநவீன ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்துடன் கூடிய “ரிமோட் கண்ட்ரோல்” கண்ணிவெடிகளை நிலைநிறுத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் நடத்திய ரகசிய விளக்கக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவை “ஆபத்து மண்டலமாக” அறிவித்துள்ள ஈரான், அங்கு 20-க்கும் மேற்பட்ட அதிநவீன கண்ணிவெடிகளை விதைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றி, கடல் வழித்தடத்தைச் சீரமைக்க குறைந்தது 6 மாதங்கள் வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் வசதி கொண்டிருப்பதால், இந்தக் கண்ணிவெடிகள் தமது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை, இது அவற்றைக் கண்டறிந்து அழிப்பதில் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

You must be logged in to post a comment.