World

ஈரானின் புதிய அலை ஏவுகணை தாக்குதல்; உலக நாடுகளிடையே பெரும் அச்சம்

இஸ்ரேலிய நிலப்பரப்பை இலக்கு வைத்து ஈரான்   ‘புதிய அலை’ ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

எனினும், ஈரானின் இந்தத் தாக்குதல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது.

ஈரானின் புதிய அலை ஏவுகணை தாக்குதல்; உலக நாடுகளிடையே பெரும் அச்சம் | Iran S New Wave Of Missile Attacks

ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்து அழித்தபோது சிதறிய ஏவுகணைத் துண்டுகள் இஸ்ரேலின் குறைந்தது மூன்று இடங்களில் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு கட்டார் அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஏவுகணைத் தாக்குதல் அபாயம் குறித்து எச்சரித்துள்ள கட்டார் உள்துறை அமைச்சு, பொதுமக்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரும் வரை பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் வெளியேற்றம் மற்றும் இவ்வாறான ஏவுகணைத் தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading