ஈரானுடன் சமரசம் செய்ய தயாராகும் அமெரிக்கா?
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $118-ஐத் தாண்டி அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் ஒரு முக்கிய ராஜதந்திர முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் முற்றியுள்ள சூழலிலும், கடலில் கப்பல்களில் தேங்கியுள்ள ஈரானிய எண்ணெயை (Iranian oil at sea) வாங்குவதற்கு ஏப்ரல் 19 வரை தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மார்ச் 20-ஆம் தேதிக்கு முன்பாக ஏற்றப்பட்ட சுமார் 140 மில்லியன் பேரல் எண்ணெயை மட்டுமே சந்தைக்குக் கொண்டுவர இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணெய் விநியோகத்தை அதிகரித்து விலையைக் குறைக்கவும், அதே சமயம் ஈரானின் புதிய எண்ணெய் உற்பத்தியைத் தடுத்து அதன் வருவாயைக் குறைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நகர்வு, பெட்ரோல் விலை உயர்வால் தவிக்கும் நாடுகளுக்கு ஒரு தற்காலிக நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You must be logged in to post a comment.