Lead News

திமிரால் ஆட்டம் காணும் உலக பொருளாதாரம்..!!

 

உலக நாடுகள் மீது கடுமையான வரியை விதித்துவிட்டு இப்போது ஹோர்முஸ் நீரிணையை திறக்க உலக நாடுகளிடம் கெஞ்சுகிறார் ட்ரம்ப்… சீனா இதில் தலையிடாவிட்டால் தனது சீனப்பயணம் நிச்சயமற்றதாக மாறும் என்கிறார் ட்ரம்ப்..

ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்க ஜனாதிபதி போர்க்கப்பல்களை அனுப்பக் கோரினாலும் யாரும் அதற்கு இன்னும் துணியவில்லை..

🇫🇷 பிரான்ஸ் — அதிகாரப்பூர்வமாக நிராகரித்தது. போர்க்கப்பல்களை அனுப்பாது.

🇨🇳 சீனா — எந்த பதிலும் இல்லை. அது ஈரானின்”இறையாண்மை உரிமை” என்று சொல்கிறது .

🇬🇧 பிரிட்டன்— இதைப் பற்றி நட்பு நாடுகளுடன் பேசவேண்டும் என்கிறது. எந்த உறுதிப்பாடும் இல்லை.

🇯🇵 ஜப்பான் — அமைதி காக்கிறது . ஜப்பானின் மத்திய கிழக்கு எண்ணெய் இறக்குமதியில் 70% ஹோர்முஸ் வழியாக வருகிறது.

🇰🇷 தென் கொரியா — முடிவு இல்லை.

🇩🇪 ஜெர்மனி — ஆதரவு இல்லை.

🇦🇺 அவுஸ்திரேலியா- ஆதரவு இல்லை

🇳🇴 நோர்வே — டிரம்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

🇶🇦 கட்டார் — அமைதி

🇦🇪 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் — அமைதி

🇮🇷 ஈரான் — இன்னும் கப்பல்களைத் தாக்குகிறது. இன்னும் கண்ணிவெடிகளை வைக்கிறது. இன்னும் ஹோர்முஸ் நீரிணையை தடுக்கிறது.

அமெரிக்கா. உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவம், உதவிகளை கோரி அவை நிராகரிக்கப்பட்ட நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கிறது..

நேற்று பிரான்ஸ் ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதியுடன் பேசி , போர் நிறுத்தத்திற்கு மன்றாடியிருக்கிறார்..

நீரிணையை திறக்க நேட்டோ நாடுகள் உதவவில்லை என்று இன்று அந்த நாடுகளை சாடியிருக்கிறார் ட்ரம்ப்..

இவர்களின் திமிர்த்தனத்தால் ஆடிக்கொண்டிருக்கிறது உலகத்தின் பொருளாதாரம்..

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading