ஈரானுடன் போரிட இஸ்ரேல் எங்களுடன் முயற்சி சவுதி குற்றச்சாட்டு!!
ஈரான் – அமெரிக்கப் போர் விவகாரத்தில் சவுதி அரேபியாவை வலுக்கட்டாயமாக இழுக்க இஸ்ரேல் முயற்சி செய்ததாக சவுதி இளவரசர் துர்க்கி அல் பைசல் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் தூதுவரான அவர் எழுதிய கட்டுரையில், பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவே இஸ்ரேல் இவ்வாறான ஒரு சதியைத் தீட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் “விவேகம் மற்றும் தொலைநோக்கு” சிந்தனையால் மட்டுமே இந்த மோதல் தவிர்க்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் “மூலோபாய குருட்டுத்தன்மை” காரணமாகவே அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அபாயகரமான போருக்குள் தள்ளப்பட்டார் என்றும் அவர் சாடியுள்ளார்.
இனிவரும் காலங்களில் இஸ்ரேல் ஒரு பாதுகாப்புப் பங்காளியாக இருக்க முடியாது என்றும், மாறாக அது பிரச்சினைகளின் ஊற்றுக்கண்ணாகவே இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

You must be logged in to post a comment.