Local

இலங்கை தேசிய விமான சேவையில் பாரிய ஊழல் அம்பலம்!!

இது 2015 பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெற்ற SriLankan Airlines நிறுவனத்தின் இயக்குநர் சபை கூட்டத்தின் பதிவாகும். (கபில சந்திரசேன பதவி விலகுவதற்கு சில நாட்களுக்கு முன் நடைபெற்ற கூட்டம்).

மேற்குறித்த ஆவணத்தில் “then president” என்று குறிப்பிடப்பட்டிருப்பது மஹிந்த ராஜபக்‌ஷவையே. குறிக்கிறது.
அதாவது, Airbus SE மற்றும் SriLankan Airlines இடையிலான விமான கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பே, Airbus SE நிறுவனம் மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றிருந்தன என்பதே இதில் வெளிப்படுகிறது.

மேலும், அந்த விமான கொள்முதல் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இலங்கையில் இலஞ்சம் வழங்கப்பட்டதாக Airbus SE நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

Airbus SE நிறுவனம், பிரிட்டனின் Serious Fraud Office (SFO) உடன் கையெழுத்திட்ட Deferred Prosecution Agreement (DPA) இன் இரண்டாவது குற்றச்சாட்டின் முதல் பகுதி கீழே வழங்கப்பட்டுள்ளது:

“இரண்டாவது குற்றச்சாட்டு, 2010 ஆம் ஆண்டின் Bribery Act சட்டத்தின் பிரிவு 7 ஐ மீறி, 2011 ஜூலை 1 முதல் 2015 ஜூன் 1 வரை, Airbus SE நிறுவனத்துடன் தொடர்புடைய நபர்கள், SriLankan Airlines நிறுவனத்திற்கான விமான கொள்முதல் செயல்முறையில் தொடர்புடையவர்களான இயக்குநர்கள் மற்றும்/அல்லது ஊழியர்களுக்கு இலஞ்சம் வழங்குவதைத் தடுக்கத் தவறியதாக குற்றம் சாட்டுகிறது. அந்த இலஞ்சம், Airbus SE நிறுவனத்திற்கு வணிக நன்மையையும் ஒப்பந்த ஆதாயத்தையும் பெறுவதற்காக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

• SriLankan Airlines என்பது இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனம் ஆகும். சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில், இலங்கை அரசு அந்த நிறுவனத்தின் 99.1% பங்குகளை வைத்திருந்தது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading