Jobs

நடமாடும் ஆய்வுகூடச் சேவையின் மூலம் மருத்துவ சேவைக்கான அணுகலை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் விரிவுபடுத்துகிறது

இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பி.எல்.சி, தனது லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் குருதிப் புற்றுநோய் மையத்திற்குள் “Hope” என்ற பிரத்தியேக இரத்தவியல் நாள் பொழுது சிகிச்சைப் பிரிவை ஆரம்பிப்பதை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த முன்னோடி வசதியானது, குருதிப் புற்றுநோய்கள் மற்றும் குருதி சம்பந்தப்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் சிகிச்சை மற்றும் ஆதரவுப் பராமரிப்பிற்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட, இலங்கையின் முதன்முதல் மற்றும் ஒரேயொரு முழு வசதிகளுடன் கூடிய தனியார் துறை நாள் பொழுது சிகிச்சைப் பிரிவாகும்.

 

“Hope” இரத்தவியல் நாள் பொழுது சிகிச்சைப் பிரிவின் தொடக்கமானது, இலங்கையில் இரத்தவியல் சிகிச்சைப் பராமரிப்பின் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக மாறியுள்ளது. ஒரே நாளில் கீமோதெரபி (chemotherapy), இம்யூனோதெரபி (immunotherapy), குருதிமாற்றம், தீவிர கண்காணிப்புச் சிகிச்சை மற்றும் சிறப்பு ஆதரவுப் பராமரிப்பு தேவைப்படும் நோயாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சைப் பிரிவு, நீண்டகாலத்திற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவையைக் குறைப்பதோடு, உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முறைகளை உங்கள் அருகிலேயே கொண்டு வருகிறது.

 

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆதரவுப் பராமரிப்பு நெறிமுறைகளை உள்ளூர் சுகாதாரச் சூழலுக்கு ஏற்ப மாற்றுவதன் மூலம், குருதிப் புற்றுநோய்கள் சிகிச்சையளிக்கக்கூடியவை மட்டுமல்ல, பல சந்தர்ப்பங்களில் குணப்படுத்தக்கூடியவை என்பதையும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. இந்தப் புதிய வசதியானது, மருத்துவச் சிறப்பையும் கருணையையும் ஒருங்கிணைத்து, மேம்பட்ட, நோயாளர்களை முன்னிலைப்படுத்திய சிகிச்சையை வழங்குவதில் இவ்வைத்தியசாலையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

 

ஒரே நாள் சிகிச்சை மூலம் புற்றுநோய் சிகிச்சைக்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கின்றது

“Hope” பிரிவு, நோயாளர்கள் சிக்கலான சிகிச்சைகளைப் பெற்று அதே நாளில் வீடு திரும்பக்கூடிய, பாதுகாப்பான, கீமோ சிகிச்சைக்குத் தயாரான, மற்றும் குருதி மாற்றத்திற்குப் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாக்கமான அணுகுமுறை, நீண்ட காலம் வைத்தியசாலையில் தங்குவதுடன் தொடர்புடைய உடல், உள மற்றும் நிதிச் சுமையைக் குறைப்பதோடு, மிக உயர்ந்த மருத்துவக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் தரங்களையும் உறுதி செய்கிறது.

 

“Healing – Closer to Home” (வீட்டுச் சூழலில் குணமடையும் ஆறுதல்) என்ற கோட்பாட்டின் வழிகாட்டுதலுடன், இந்த சிகிச்சைப் பிரிவு நோயாளர்கள் வைத்தியசாலையில் தங்கியிருக்க நேரிடும் நேரத்தைக் குறைத்து, தங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட உதவுகிறது. தேவையற்ற வகையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களைக் குறைப்பதன் மூலம், வைத்தியசாலைகளில் தங்கிருக்கும் போது ஏற்படும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பையும் இந்த சிகிச்சை வசதி குறைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நோயாளர்களுக்கு ஒரு முக்கிய விடயமாகும். மேலும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

 

நோயாளர்களின் அனுபவம்: அதிக ஆறுதல், மிகுந்த வசதி

குருதிப் புற்றுநோயாளர்கள் பலருக்கு, சிகிச்சை என்பது பல நாட்கள் வைத்தியசாலையில் தங்குவதையே வழக்கமாக உள்ளடக்கியிருந்தது. இது மன அழுத்தம், குடும்ப வாழ்க்கையில் இடையூறு மற்றும் அதிகரித்த மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தியது. “Hope” இரத்தவியல் நாள் பொழுது சிகிச்சைப் பிரிவில், Diffuse Large B-Cell Lymphoma மற்றும் Multiple Myeloma போன்ற நோய்களுக்குச் சிகிச்சை பெறும் ஒரு நோயாளர் காலையில் வந்து, குருதிப் பரிசோதனைகளை விரைவாக மேற்கொண்டு, விசேட புற்றுநோயியல் தாதியர்களின் மேற்பார்வையில் கீமோதெரபியைப் பெற்று, அன்றே வீட்டிற்குத் திரும்பலாம். சிகிச்சை முழுவதும், நோயாளர்கள் எந்தவொரு சிக்கலையும் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் கையாளும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவச் சூழலில் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்.

 

இதன் விளைவாக, மருத்துவச் சிகிச்சை முடிவுகளில் எவ்விதமான குறைவுமின்றி, ஆறுதல், வசதி மற்றும் தொடர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சிகிச்சைக்கான வாய்ப்பு இதன் மூலமாக ஏற்பட்டுள்ளது.

 

“Hope” இரத்தவியல் நாள் பொழுது சிகிச்சைப் பிரிவு, அதே நாளிலேயே சிகிச்சை சேவைகளை வழங்குவதன் மூலம் புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு விரிவான, நோயாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை வழங்குகிறது. இது பல கீமோதெரபி, இம்யூனோதெரபி மற்றும் குருதிமாற்ற நடைமுறைகளுக்கு இரவுநேரத்தில் வைத்தியசாலையில் தங்க நேரிடும் தேவையை நீக்குகிறது. விசேட மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய இந்த சிகிச்சைப் பிரிவு, இரத்தவியல் நோயாளர்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, உயர் கண்காணிப்புடன் கூடிய சூழலை வழங்குகிறது. இது சிக்கலான சிகிச்சைகள் மற்றும் உயிர்காக்கும் குருதிப் பொருட்கள் பாதுகாப்பாக வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்களைக் குறைப்பதன் மூலம், இந்த சிகிச்சைப் பிரிவு செலவுகளைக் குறைக்கும் சிகிச்சைகளுக்கான தெரிவை வழங்குவதோடு, அதனுடன் தொடர்புடைய மருத்துவச் செலவுகளையும் குறைக்கிறது. முக்கியமாக, இந்த நாள் பொழுது சிகிச்சைப் பிரிவு வைத்தியசாலையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு குறிப்பாகப் பயனளிக்கிறது. மேலும், நோயாளர்களை மையமாகக் கொண்ட இந்த அணுகுமுறை, தனிநபர்கள் தாங்கள் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளும் நேரம் முழுவதும் தங்கள் குடும்பங்கள், அன்றாட வழக்கங்கள் மற்றும் ஆதரவு முறைமைகளுடன் இணைந்திருக்க உதவுகிறது. இது உடல் மற்றும் உள நலனை மேம்படுத்துகிறது.

 

இலங்கையில் மருத்துவச் சிறப்பை மேம்படுத்துதல்

“Hope” இரத்தவியல் நாள் பொழுது சிகிச்சைப் பிரிவின் தொடக்கமானது, புத்தாக்கம், அணுகல் மற்றும் மருத்துவச் சிறப்பு ஆகியவற்றின் மூலம் புற்றுநோய் சிகிச்சையை மாற்றியமைப்பதற்கான லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. இந்த சிகிச்சை மையம், 6ம் மாடி, லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், இல. 578, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05 என்ற முகவரியில் அமைந்துள்ளது. மருத்துவ ஆலோசனைகள், நோயாளர்களுக்கான பரிந்துரைகள் அல்லது மேலதிக தகவல்களுக்கு, லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் குருதிப் புற்றுநோய் சிகிச்சை மையம் வருடத்தில் 365 நாட்களும், 24 மணி நேரமும் செயல்படுகிறது. மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: உடனடி சேவை மையம்: +94 70 431 0530 அல்லது +94 71 119 7879

 

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள்

 

குருதிப் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் ஹேவாமன மங்கள விளக்கேற்றுகிறார்.

 

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் குருதிப் புற்றுநோய் “HOPE” நாள் பொழுது சிகிச்சைப் பிரிவு

 

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தொடர்பான விபரங்கள்

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் இலங்கையின் தனியார் சுகாதாரத் துறையில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இது நவீன  மருத்துவத் தொழில்நுட்பத்தையும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தராதரங்களையும் அறிமுகப்படுத்துவதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. மருத்துவத்துறை நிபுணத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் தொடர்ச்சியான முதலீடுகளைச் செய்வதன் மூலம், இந்த நிறுவனம் இலங்கைக்கும் பரந்த பிராந்தியத்திற்கும் உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவையை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading