World

ஈரானை வீழ்த்த அமெரிக்கா கையாளும் முதன்மை ஆயுதம்!

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா பயன்படுத்தும் பொருளாதார நெருக்கடியே மிகவும் பயனுள்ள ஆயுதம் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இது மிகவும் நுட்பமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரான் மீது பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா அதிகரிக்கும் போது பதிலுக்கு அவர்களும் அமெரிக்கா மீது பொருளாதார ரீதியான அழுத்தத்தைக் கொடுக்க முயற்சிப்பார்கள் என்பதால் இது ஒரு நுட்பமான சூழல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானை வீழ்த்த அமெரிக்கா கையாளும் முதன்மை ஆயுதம்! | Vance Pressure Most Effective Tool

இருப்பினும், கடந்த சில வாரங்களாக அமெரிக்காவை விட ஈரான் தரப்பே அதிக நெருக்கடியை உணர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் அமெரிக்க மக்கள் பெட்ரோல் நிலையங்களில் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டி உள்ளது உண்மைதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்க முயன்றாலும் அந்தப் பாதை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயுக் கப்பல்களைப் பாதுகாப்பாக அனுப்பி அமெரிக்க மக்களுக்குச் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது அணுஆயுதக் கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க முடியாது என்பதை உறுதி செய்வதே தங்களது இறுதி இலக்கு என அவர் குறப்பிட்டுள்ளார்.

மேலும் ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிக்காது என்ற நிலையை உருவாக்குவதற்கான கட்டத்தில் அமெரிக்கா செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading