எலிபண்ட் ஹவுஸ் கிறீம் சோடா வழங்கும் ‘POP Culture 2026’: விரைவில் இலங்கையின் மிகப்பெரிய இளைஞர் திருவிழா
எலிபண்ட் ஹவுஸ் கிறீம் சோடா, ShowUp Entertainment நிறுவனத்துடன் இணைந்து, இலங்கை இளைஞர்களுக்கு ‘POP Culture 2026’ மூலம் ஒரு உண்மையான சர்வதேசத் திருவிழா அனுபவத்தை வழங்கத் தயாராகி வருகின்றது.
ஓகஸ்ட் 28 – 29 ஆகிய திகதிகளில் கொழும்பு துறைமுக நகரில், எலிபண்ட் ஹவுஸ் கிறீம் சோடா வழங்கும் ‘POP Culture 2026’ நடைபெறவுள்ளது. இது ஒரு தலைமுறையை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இசை, நடனம், பேஷன், கலை மற்றும் சுயவெளிப்பாடுகளின் இரண்டு நாள் கொண்டாட்டமாகும். இத்திருவிழாவானது உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி இளைஞர்களுக்கான நிகழ்வுகளின் பிரமாண்டம், படைப்பாற்றல், உற்சாகம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இலங்கை இதுவரை கண்டிராத ஒரு அனுபவத்தை உருவாக்கவுள்ளது.
‘POP Culture 2026’ நிகழ்வானது வெறுமனே இசைத் திருவிழா மட்டுமல்ல. இது இன்றைய இளைஞர்களின் இலட்சியங்களைப் பிரதிபலிப்பதோடு, உள்ளூர் திறமையாளர்கள் உலகளாவிய பொழுதுபோக்குகளைச் சந்திக்கும் ஒரு தளத்தை உருவாக்கும் ஒரு கலாசார இயக்கமாகும். சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பிரமாண்டமான தயாரிப்புகள் முதல் அதிசிறந்த படைப்பாற்றல் அனுபவங்கள் வரை, ஒவ்வொரு அம்சமும் இலங்கையின் இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் இலட்சியங்களைக் கொண்டாடும் அதே வேளையில், உலகத்தரம் வாய்ந்த சூழலை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகவும் பிரபலமான இளைஞர்களுக்கான வர்த்தகநாமங்களில் ஒன்றான எலிபண்ட் ஹவுஸ் கிறீம் சோடா, வெறுமனே புத்துணர்ச்சிக்கும் மேலான புதிய சகாப்தத்தின் அனுபவங்களை முன்னெடுப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திருவிழாவானது இளைஞர் கலாசாரத்தில் ஒரு தைரியமான முதலீட்டை குறிக்கிறது. இளம் படைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் கனவு காண்பவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், பிராந்திய மற்றும் சர்வதேச பிரபலங்களுடன் இணைவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.
‘அலுத் கலாவக்’, ‘யாகா பெஸ்டிவல்’, ‘அஹங்கார நகரே’, ‘அப்ரோ சபாரி’, ‘யாகா ஹியூமன்’ போன்ற கலைநிகழ்ச்சிகளை உருவாக்கிய ShowUp Entertainment உடனான கூட்டாண்மையானது, இலங்கை இளைஞர்களுடனான எலிபண்ட் ஹவுஸ் கிரீம் சோடாவின் ஆழமான தொடர்பையும், பாரிய பொழுதுபோக்கு மற்றும் கலாசார அனுபவங்களை உருவாக்குவதில் ShowUp Entertainment நிறுவனத்தின் நிபுணத்துவத்தையும் ஒன்றிணைக்கிறது. ஒன்றாக இணைந்து, இரு கூட்டாளர்களும் இளைஞர் கலாசாரத்தைக் கொண்டாடும் அதே வேளையில், இலங்கை திறமையாளர்கள் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதற்கான ஒரு தளத்தை வழங்கும் ஒரு திருவிழாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்விற்கு ஆயிரக்கணக்கான விழாப் பிரியர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எலிபண்ட் ஹவுஸ் கிரீம் சோடா வழங்கும் POP Culture 2026 நிகழ்வானது, கொழும்பு துறைமுக நகரை இளைஞர் கலாசாரத்தின் முக்கிய தளமாக மாற்றவுள்ளது. படைப்பாற்றல், ஒற்றுமை மற்றும் எல்லையற்ற சாத்தியக்கூறுகளின் கொண்டாட்டமாக அமையவுள்ளதோடு, இலங்கை ஒரு உலகளாவிய மேடைக்குத் தயாராக உள்ளது என்பதையும், இந்நாட்டு இளைஞர்கள் அதை வழிநடத்தத் தயாராக உள்ளனர் என்பதையும் இது நிரூபிக்கவுள்ளது.

You must be logged in to post a comment.