ஈரான் அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை..!!
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா இராஜதந்திர தீர்வுகளை விடுத்து, பொறுப்பற்ற இராணுவ நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக, ஈரானின் ஏவுகணை பலம் குறைந்துள்ளதாக சிஐஏ வெளியிட்ட தகவலை மறுத்துள்ள அவர், ஈரானின் ஏவுகணை இருப்பு மற்றும் ஏவுதளத் திறன் தற்போது 120 சதவீதமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானியர்கள் ஒருபோதும் அழுத்தங்களுக்குப் பணியமாட்டார்கள் என்றும், நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான தயார்நிலை 1,000 சதவீதமாக இருப்பதாகவும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.