ஈரான் – ரஷ்யா இடையே புதிய கடல்வழிப் பாதை
ஈரானுக்கு அத்தியாவசிய ராணுவ தளவாடங்களை வழங்குவதற்காக, காஸ்பியன் கடல் வழியாக ரஷ்யா ஒரு மூலோபாய கடல்வழிப் பாதையை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் டைம்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்த தகவல், சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய கடல்வழிப் பாதை மூலம் ரஷ்யா தனது ராணுவ உபகரணங்களை ஈரானுக்கு நேரடியாகவும் வேகமாகவும் கொண்டு செல்ல முடியும் என அமெரிக்க தரப்பு கருதுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நெருக்கமான ராணுவ ஒத்துழைப்பு மற்றும் காஸ்பியன் கடல் பகுதியில் அதிகரித்துள்ள போக்குவரத்து நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

You must be logged in to post a comment.