World

ஈரான் எண்ணெய் கப்பல்களைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டம்

🚨Breaking ஈரான் மீதான கடல்வழி முற்றுகையைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அந்நாட்டுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்களை சர்வதேச கடல் எல்லைகளில் வைத்துப் பறிமுதல் செய்ய அமெரிக்கப் படைகள் தயாராகி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. ஈரானின் வருமானத்தைத் தடுத்து, அதன் இராணுவச் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் ‘தேடுதல் மற்றும் பறிமுதல்’ (Visit, Board, Search, and Seizure) நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கக் கடற்படைக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் முழு அதிகாரம் வழங்கியுள்ளது.இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே, ஓமன் அருகே சென்ற ஒரு வணிகக் கப்பலை ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் (IRGC) துப்பாக்கியால் சுட்டுத் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவின் இந்த அதிரடித் திட்டம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading