டிரம்ப் ஒரு மிகப்பெரிய பொய்யர்…!!!
ஹங்கேரிக்கான ஈரான் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் டொனால்ட் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்து ஒரு மீம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜி ஜின்பிங், நரேந்திர மோடி, புதின் மற்றும் ஈரான் அதிகாரிகள் ஆகியோர் ட்ரம்ப்பின் பல்வேறு கூற்றுகளை மறுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
”ட்ரம்ப் ஒரு பெரிய பொய்யர்” (Trump is a big liar) என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ள இந்தப்பதிவு தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமைதி பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர ஒப்பந்தங்கள் குறித்து ட்ரம்ப் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய் என்பதைச் சுட்டிக்காட்ட ஈரான் இந்த வழியைக் கையாண்டுள்ளது.

You must be logged in to post a comment.