World

ஈரான் என்ற நாடே இருக்காது… ! எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

ஈரான் தன்னைக் கொன்றால் ஈரான் என்ற நாடே இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில், பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் ட்ரம்ப் பங்கேற்போது, அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் ட்ரம்பை கொலை செய்வதற்கு ஈரான் நாட்டில் சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளிவந்தது.

ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவராக இருந்த காசிம் சுலைமானி கடந்த 2020ஆம் ஆண்டில் ஆளில்லா விமானம் கொண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோருக்கு ஈரானில் இருந்து கொலை மிரட்டல்கள் விடப்பட்டுள்ளன.இதன் விளைவாக ட்ரம்புக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.

ஈரான் என்ற நாடே இருக்காது... ! கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் | There Will Be No Country Called Iran Trump Warns

இந்நிலையில், தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள ட்ரம்ப், ஈரான் மீது அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் தன்னைக் கொன்றால் அதை அழிக்க வேண்டும் என்று ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அத்துடன், ஈரான் என்ற நாடே இருக்காது, அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது என ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading