உடைகிறது போர்நிறுத்தம்: ஈரான் மீது அமெரிக்கா அதிரடி வான்வழித் தாக்குதல்!
…..
ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானிய ராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் ஏவுகணை, ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் ரேடார் தளங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் (US CENTCOM) தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா நடத்தியிருக்கும் முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.
ஈரானின் ஆபத்தான நடவடிக்கைக்கு இதுவொரு “வலுவான பதிலடி” என அமெரிக்கா கூறியுள்ளது. இந்த அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.