World

உணவுக்காக தலைமுடியை சாப்பிடும் அதிசய சிறுமி!

சிறுமியொருவர் தலைமுடியை சாப்பிடும் அரிய வகை நோயால் பாதிக்ப்பட்டிருக்கும்  தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

சீனாவின் ஷான்ஸி என்ற மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 14 வயது மதிக்கதக்க சிறுமியொருவர் தன்னுடைய தாத்தா பாட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களின் பெற்றோர்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து சில காலமாக தொடர்ந்து சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது, இவரை மருத்துவ பரிசோனை உட்படுத்தி பார்த்தில் சிறுமியின் வயிற்றில் சுமார் 3 கிலோகிராம் மதிக்கதக்க தலைமுடி இருப்பதாக மருத்துவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுமிக்கு சமிபக்காலமாக அழுக்கு, பேப்பர், களிமண் மற்றும் பிற உண்ணக்கூடாத பொருட்களை சாப்பிடும் “Pica” என்ற நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் தான் சிறுமி தலைமூடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

உணவிற்கு பதிலாக தலைமுடியை சாப்பிடும் அரிய வகை நோய்! அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்கள் | Rare Hair Eating Disease

அறுவை சிகிச்சை

சிறுமியின் மனநிலை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள வந்துள்ளதால் அவள் மனழுத்தம் கூடும் போதெல்லாம் தலைமூடியை சாப்பிட்டு வந்ததால் தலையில் முடி குறைவாக காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சிறுமியின் வயிற்றுப்பகுதியிலிருந்த முடி அகற்றப்பட்டுள்ளது என்றும் சிறுமி தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading