Local

உணவுப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

உணவு பொருள்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விளம்பரங்களை புதிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தி கடுமையாகக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ் புதிய ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய ஒழுங்கு விதிகளுக்கு அமைய உணவு பொருள்கள் தொடர்பான விளம்பரங்களை மூன்றாம் தரப்பினர் ஊடாக செய்யும்போது அதற்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.

விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உணவுச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த 6 மாதங்களில் இந்த புதிய ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading