Local

உதயங்க வீரதுங்க கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும் ராஜபக்ச குடும்பத்தின் உறவினருமான உதயங்க வீரதுங்க இன்று நாடு திரும்பிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவில் தூதுவராக இருந்தவேளையில் அவர் மிக் ரக விமானக்கொள்வனவின்போது பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தின்போது அவரை நாட்டுக்கு அழைக்க முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை.
இதன்பின்னர் யுக்ரெய்னில் சில காலம் தங்கியிருந்த அவர் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்தார்.
எனினும் இலங்கைக்கும் ஐக்கிய அரபு ராச்சியத்துக்கும் இடையில் கைதி பரிமாற்ற உடன்பாடு இல்லாமை காரணமாக அவரை இலங்கை அரசாங்கத்தினால் நாடு கடத்துமாறு கோர முடியவில்லை.
இந்தநிலையிலேயே அவர் இன்று அதிகாலை மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்துள்ளார்.
இலங்கைக்கு வந்ததும் அவரை குற்றப்புலனாய்வுத்துறையினர் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading