Local

உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஊடக சந்திப்புகளை இரத்து செய்த மொட்டு கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தினசரி ஊடகவியலாளர் மாநாட்டை இரண்டு வாரங்களுக்கு நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலைக்கு ராஜபக்சர்கள் உள்ளிட்ட அதிகார வர்க்க குழுவே காரணம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அக்கட்சி பெரும் சிக்கலில் உள்ளது.

இதனால் ஊடகங்களின் கேள்விகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலை கட்சிக்கு ஏற்பட்டுள்ளதால் மேற்படி தீர்மானத்தை அக்கட்சி எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

நிலைமை ஓரளவுக்கு அமைதியடையும் வரை கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் தினசரி ஊடகவியலாளர் சந்திப்பை இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading