Local

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையைக் கண்டறிய வேண்டும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதுல் சம்பவம் தொடர்பான விசாரணையை திசைதிருப்பும் வகையிலான அரசாங்கத்தின் நகர்வை அனுமதிக்க முடியாதென பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று தெரிவித்தார்.

உண்மையைக் கண்டறிந்து, உள்நாட்டிலேயே நீதியை வழங்குவதற்கான அதிகாரம் அரசாங்கத்திடம் இருக்கும் நிலையில், சர்வதேசத்தை நாடுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொய்யுரைத்து, உண்மையை மூடி மறைப்பதற்காகவே பாப்பரசரை சந்திப்பதற்கு ஆளுந்தரப்பினர் முற்பட்டுள்ளனர் எனவும் பேராயர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஜனாதிபதிக்கு தம்மால் அனுப்பட்ட கடிதத்துக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை எனவும் பேராயர் கவலை வெளியிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading