Sports

உலகக் கிண்ண போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் மீண்டும் வீழ்த்தும்!

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீண்டும் வீழ்த்தும் என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர்.

எதிர்வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரையில் ஆஸ்திரேலிய நாட்டில் 2022 டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. அதனால் அக்டோபர் 23-ஆம் தேதி அன்று மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இரண்டு அணிகளுக்கும் இதுவே இந்த தொடரில் முதல் போட்டியாக அமைந்துள்ளது.

“மீண்டும் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும். டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை விட பாகிஸ்தான் சிறந்த அணி. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிகளில் இந்திய ஊடகங்கள் இந்திய அணியின் மீது அதிகப்படியான அழுத்தத்தைத் தருகிறது. இந்தியா தோல்வியை தழுவுவது இயல்பு” என தெரிவித்துள்ளார்.

விராட் மற்றும் ரோகித் சரியாக விளையாடவில்லை என்றால் இந்தியா அணியால் பிரஷரை ஹேண்டில் செய்ய முடியாது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading