Cinema

போதையில் பிரியாணி சாப்பிட்ட நடிகர் உயிரிழப்பு!

போதையில் பிரியாணி சாப்பிட்ட குறும்பட நடிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியில், ரத்தினம் பகுதியை சேர்ந்த குறும்பட இயக்குனர் ரஞ்சித் என்பவர் ஒரு சில குறும்பட படங்களை இயக்கியுள்ள நிலையில், பட வாய்ப்புக்காக காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் மது அருந்திய அவர், போதையிலேயே பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்ட சில மணிநேரத்திலேயே ரஞ்சித் மயங்கியுள்ளார்.

இதனால் அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading