Local

உலகப் பொருளாதார  வீழ்ச்சியால் சுமார் 50 கோடிப்பேர் ஏழ்மைக்குத் தள்ளப்படுவார்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைர ஸால் ஏற்பட்ட பொருளாதார  வீழ்ச்சியால் சுமார் 50 கோடிப்பேர் ஏழ்மைக்குத் தள்ளப்படுவார்கள்…’’ என்று அதிர்ச்சியளிக்கிறது ஐ.நா.வின் ஆய்வு. கடந்த முப்பது வருடங்களில் இந்த அளவுக்கு ஏழ்மை அதிகரிப்பது இதுவே முதல் முறை.

இதனால் உலக வங்கி தலைவர்களும், சர்வதேச நிதி மையத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், ஜி20 நாடுகளைச் சேர்ந்த நிதியமைச்சர்களும் அடுத்த வாரம் ஒன்று கூடி ஆலோசிக்க இருக்கிறார்கள். ‘‘கொரோனா வைரஸால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனையைவிட பொருளாதாரத்தில் ஏற்படும் பிரச்சனை கடுமையானதாக இருக்கும்…’’ என்று எச்சரிக்கிறார் ஆஸ்திரேலியன் நேஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர்.
‘‘கிழக்கு மற்றும் தென் ஆசியா, பசிபிக், ஆப்பிரிக்க நாடுகளில் தான் இந்த ஏழ்மையின் தாக்கம் அதிகமாக இருக்கும். தவிர, கொள்ளை நோயின் காலத்தில் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் ஏழ்மையில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர் …’’ என்கிறது அந்த ஆய்வு

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading